தமிழகத்தில் 7 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை!!
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆம், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை, திருப்பத்தூர், திண்டுக்கல், மதுரை, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.