1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have heavy rain

ஆகஸ்ட் 4 வரை… கனமழை முதல் அதி கனமழை!

தமிழகம்
ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


தென்மேற்கு பருவமழை காரணமாக அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டிலும் சில பகுதிகளில் ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டிலும் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக கன்னியாக்குமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சில பகுதிகளில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆகஸ்ட் 4 ஆம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

குமரி, நெல்லை, திருச்சி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டையில் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
Sugapriya Prakash