1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have dry climate

எதிர்வரும் பிப்ரவரி 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் வறண்ட வானிலையே..!!

தமிழகம்
எதிர்வரும் பிப்ரவரி 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் எதிர்வரும் பிப்ரவரி 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
அதோடு சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்தது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி ஒட்டி இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
அடுத்த கட்டுரையில்
இந்தியாவில் 54 சீன மொபைல் செயலிகளுக்கு தடை?