1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Man set up a direction board for 28 countries

28 நாடுகளுக்கு வழிகாட்டிப் பலகை… தஞ்சாவூரில் இருந்து உலக நாடுகளுக்கு திசைகாட்டி!

வழிகாட்டி பலகை
தஞ்சாவூரில் அங்கிருந்து 28 நாடுகள் எந்த திசையில் எவ்வளவு தொலைவில் உள்ளன என்பது குறித்து அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் அந்த ஊரில் இருந்து நான்கு திசைகளிலும் இருக்கும் ஊர்களின் தொலைவு மற்றும் செல்லும் வழி பற்றிய பலகைகள் வைக்கப்பட்டு இருக்கும். அப்படி இப்போது தஞ்சாவூரில் இருந்து 28 நாடுகளுக்கு வழிகாட்டி பலகை வைத்துள்ளார் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உறந்தைராயன் குடிகாடு பகுதியைச் சேர்ந்த மாமல்லன் என்பவர். இவர் அப்பகுதியில் பெட்ரோல் பங்க் மற்றும் தேநீர் கடை ஆகியவற்றை நடத்திவருகிறார்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் 28 நாடுகளை தேர்வு செய்து அவர் இந்த வழிகாட்டிப் பலகையில் அமைத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
எதிர்வரும் பிப்ரவரி 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் வறண்ட வானிலையே..!!