1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu Government Notifies Rooftop Solar Subsidy Scheme

வீடுகளில் சோலார் தகடுகள்.. ரூ.1 லட்சம் வரை மானியம்.. தவெக அரசி அதிரடி அறிவிப்பு..

ரூப்டாப் சோலார் திட்டம்
தமிழகத்தில் கூரை மீது சோலார் தகடுகள் அமைக்கும் வீட்டு உபயோக பயனாளர்களுக்காக மாநில அரசின் சார்பில் ரூ.22,000 வரை புதிய மானியம் வழங்கும் திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மத்திய அரசின் 'பிஎம் சூர்யா கர்' திட்ட மானியத்துடன் இணைந்து இந்த மாநில அரச மானியமும் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 1 கிலோவாட் அமைப்பிற்கு மத்திய அரசு வழங்கும் ரூ.30,000 மானியத்துடன் மாநில அரசு ரூ.5,000 சேர்த்து மொத்தம் ரூ.35,000-மும், 2 கிலோவாட் அமைப்பிற்கு ரூ.70,000-மும் மானியமாக வழங்கப்படும். குறிப்பாக 3 கிலோவாட் சோலார் அமைப்புக்கு மத்திய அரசின் ரூ.78,000 மற்றும் மாநில அரசின் ரூ.22,000 சேர்த்து ஒட்டுமொத்தமாக ரூ.1 லட்சம் வரை மிகப்பெரிய அளவில் மானியம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 
வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சுமார் 1 லட்சம் இல்லங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக மாநில அரசு சார்பில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 
வீடுகளின் மின்கட்டணத்தை பெருமளவில் குறைப்பதோடு, பசுமை எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
 
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு.. நாளை முதல் கனமழையா?