தொடர்புடைய செய்திகள்
- மின்வெட்டு தொடர்பாக காரச்சார விவாதம்! – அதிமுக வெளிநடப்பு!
- தனியார் வேண்டாம்! அரசே வீடுகளை கட்டி விற்க வேண்டும்! – ராமதாஸ் கோரிக்கை!
- மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் – மீண்டும் அமலுக்கு வந்த உத்தரவு!
- காலாவதியாகும் தடுப்பூசிகள்: தமிழகத்தில் மீண்டும் தடுப்பூசி முகாமுக்கு ஏற்பாடு!
- பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்; இன்று முதல் ஆன்லைனில்..! – முக்கிய அறிவிப்பு!
நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை பருவம் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. எனினும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் லேசானது மோதல் மிதமான மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.
அடுத்த கட்டுரையில்
