மின்வெட்டு தொடர்பாக காரச்சார விவாதம்! – அதிமுக வெளிநடப்பு!
தமிழக சட்டமன்றத்தில் மின்வெட்டு தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்தி அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் மின்வெட்டு தொடர்பாக சட்டமன்றத்தில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானத்தை நிறைவேற்றியது.
இதற்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி “கடந்த 18-ஆம் தேதி தமிழகத்தின் ஒருநாள் மின் நுகர்வு 317 மில்லியன் யூனிட்டாக இருந்த நிலையில் நேற்று 363 மில்லியன் யூனிட்டாக உயர்ந்துள்ளது. குறுகிய கால ஒப்பந்த மூலம் 3,000 யூனிட் மின்சாரத்தை தனியார் நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்து வருகிறோம்.
தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவையாக உள்ளது. ஆனால், மத்திய அரசு கடைசியாக நாள் ஒன்றுக்கு 32 ஆயிரம் டன் நிலக்கரியை மட்டுமே அளித்தது. இதுவே மின்வெட்டுக்கு முக்கிய காரணம்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்த பதிலை ஏற்க மறுத்த அதிமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.