1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 2 arrested and one abscond in madurai 3 dead case

விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம்: 2 பேர் கைது, ஒருவர் தலைமறைவு

madurai dead
மதுரை பழங்காநத்தம் பகுதியில் நேற்று இரவு விஷவாயு தாக்கியதால் 3 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் குறித்து 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார். 
 
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் விஜய் ஆனந்த் சென்னையில் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வந்ததையடுத்து இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
மேலும் தலைமறைவாக உள்ள ஒப்பந்ததாரரை கைது செய்ய தனிப்படை போலீசார் சென்னை விரைந்து உள்ளதாகவும் இன்று அல்லது நாளைக்குள் ஒப்பந்த உரிமையாளர் விஜய் ஆனந்த பிடிவிடுவார் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் மதுரையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலியானவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
 
 
அடுத்த கட்டுரையில்
வெளிநாட்டு சதியால் பதவி இழந்தேன்: இம்ரான்கான்