செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (11:24 IST)

மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் – மீண்டும் அமலுக்கு வந்த உத்தரவு!

Face Mask
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தன. முன்னதாக மாஸ்க் அணியாமல் பொதுவெளியில் நடமாடினால் ரூ.500 அபராதம் என தமிழக அரசு அறிவித்திருந்த உத்தரவும் திரும்ப பெறப்பட்டிருந்தது.
Radhakrishnan

இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மாஸ்க் அணிவது அவசியம் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் என்ற உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.