1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu 6 districts to have rain

தீவிரமடைந்த சுழற்சி: அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் மாதம் மிகப்பெரிய அளவில் பெய்தது என்பதும் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து வந்ததால் பெய்த கனமழையின் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல நீர்நிலைகள் நிரம்பி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜனவரியிலும் தற்போது மழை பெய்து வருவது பெரும் ஆச்சரியத்தை அளித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தீவிரம் அடைந்துள்ளதால் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
அதாவது அடுத்த 3 முதல் 6 மணி நேரத்துக்குள் நெல்லை, மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சி, தஞ்சையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் !