திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 8 ஜனவரி 2021 (17:04 IST)

மன்னிப்பு பட்டியல் தயார் செய்யும் டிரம்ப் !

அதிபர் டிரம்ப் தனது தோல்வியை நீண்ட நாட்கள் கழித்து ஒப்புக்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியான நிலையில்  தனது பதவி காலத்தில் தான் தனது குடும்பம், வெள்ளை மாளிகை அதிகாரிகள், ஆலோசகர்கள் உள்ளிட்ட பலரும் குற்றம் செய்திருந்தால் மன்னிப்பு  வழங்க எழுத டிரம்பர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன், நடப்பு அதிபர் ட்ரம்பை விட அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருப்பினும் அவரது வெற்றியை ஏற்றுக் கொள்ளாமல் அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்தார்.

இதனிடையே அமெரிக்காவின் பல பகுதிகளில் ட்ரம்ப் – ஜோ பிடன் ஆதரவாளர்கள் இடையே வன்முறையும் வெடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று அமெரிக்கா நாடாளுமன்றத்திற்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து போராட்டம் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் பலியான நிலையில் நெரிசலில் சிக்கி மேலும் மூவர் உயிரிழந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த கலவரத்திற்கு மத்தியில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜோ பிடனை அதிபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றிய கையேடு, வெற்றியை அங்கீகரித்து ஜோ பிடனுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு வரும் 20 ஆம் தேதி அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்கிறார்.

இந்நிலையில், முன்னாள் அதிபர் டிரம்ப் தனது தோல்வியை நீண்ட நாட்கள் கழித்து ஒப்புக்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகிறது.

மேலும் வன்முறையைத் தூண்டும் வகையில் தனது சமூக வலைதளங்களின் பக்கத்தில் கருத்துகள் பதிவிட்டு வந்ததற்காக அடுத்த 24 மணிநேரத்திற்கு டிரம்பின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக டிரம்ப் பேசிய அனைத்துக் காணொளிகளும் நீக்கப்பட்டுள்ளது. எனவே வரும் 20 ஆம் தேதி ஒழுங்கான முறையில் ஜோ பைடனிடம் அதிகாரம் மாற்றப்படும் என டிரம்ப் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் டிரம்பின் அதிபர் பதவி காலம் வரும், 19 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

எனவே தான் தனது குடும்பம், வெள்ளை மாளிகை அதிகாரிகள், ஆலோசகர்கள் உள்ளிட்ட பலரும் குற்றம் செய்திருந்தால் மன்னிப்பு  வழங்க  டிரம்பர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகிறது

மேலும் இதற்கான பட்டியலையும் டிரம்ப் தயார் செய்து வருவதாகவும் தான் பதவிவிலகும் நாளில் இந்தப் பட்டியலை வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது. அப்போதுதான் டிரம்பின் கௌரவம் உயரும் எனக் கூறப்படுகிறது.