திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 8 ஜனவரி 2021 (15:53 IST)

பாசிச புத்திக்கு குனியும் கேவலம் அதிமுக: உதயநிதி காட்டம்!

பாசிச பாஜக அரசின் மொழித்திணிப்பு புத்திக்கு அதிமுக அரசு குனிவது  கேவலம் என உதயநிதி ஸ்டாலின் விமர்சனம். 

 
அஞ்சல் துறையில் கணக்காளர் பணிக்கு நடைபெறவுள்ள உள்ள தேர்வு இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே  நடைபெறும் என மத்திய அரசு அறிவித்திருப்பது தமிழகத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
அதில், அஞ்சல் துறை கணக்கர் தேர்வை நடத்துவதற்கான பட்டியலில் இருந்து தமிழ் நீக்கப்பட்டுள்ளது, பாசிச பாஜக அரசின் மொழித்திணிப்பு புத்தியையே காட்டுகிறது. தமிழ்நாட்டு வேலைகளையே வட மாநிலத்தவருக்கு தாரை வார்க்கும் அடிமைகள் இதற்கும் வழக்கம் போல் அழுத்தம் கொடுப்போம் என குனிவது அதைவிட கேவலம். அனைத்து மத்திய அரசுப்பணிக்கான தேர்வுகளையும் தமிழ் உட்பட எல்லா அட்டவணை மொழிகளிலும் நடத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார். 
 
இது குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அஞ்சல் துறை தேர்வில் தமிழை கட்டாயம் மத்திய அரசு சேர்க்கும் என உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.