1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sv sekar comment about annamalai

அண்ணாமலை விலகவில்லை!. அவர தூக்கிட்டாங்க!.. எஸ்.வி.சேகர் நக்கல்!..

sv sekar
நயினார் நாகேந்திரனுக்கு முன்பு தமிழக பாஜக தலைவராக இருந்தவர் அண்ணாமலை. இவர் அந்த பதவிக்கு வந்ததும் பாஜக புத்துணர்ச்சி பெற்றது. தமிழகத்தில் பாஜகவை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தவர் அண்ணாமலை.. தொடர்ந்து ஊடகங்களை சந்திப்பது, செய்தியாளர்களை சந்தித்து திமுகவுக்கு எதிராக பேசுவது என களமாடி வந்தார். இவரால் பாஜகவின் வாக்கு வங்கியும் தமிழகத்தில் அதிகரித்தது.

ஆனால் அதிமுகவின் முக்கிய தலைவர்களை இவர் கடுமையாக விமர்சித்ததால் இவர் மீது எடப்பாடி பழனிச்சாமிக்கு கோபம் ஏற்பட்டது. எனவே அண்ணாமலையை பதவியில் இருந்து தூக்கினால் மட்டுமே நான் கூட்டணிக்கு வருவேன் என பழனிச்சாமி அடம்பிடிக்க அண்ணாமலை தூக்கிவிட்டு நயினர் நாகேந்திரனை பாஜக தலைமை நியமித்தது.

ஆனாலும் தொடர்ந்து ஊடகங்களை சந்திப்பது ,அரசியல் நிலவரம் பற்றி பேசுவது என்ன ஆக்டிவாகவே இருக்கிறார் அண்ணாமலை. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு 6 தொகுதிகளுக்கு இவரை தேர்தல் பொறுப்பாளராக பாஜக நியமித்தது.. ஆனால் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என காரணம் சொல்லி அந்த பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறார் அண்ணாமலை.

ஆனால் இதன் பின்னணியில் வேறு காரணம் இருப்பதாக பலரும் தெரிவித்து வருகிறார்கள்.. இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த எஸ்வி சேகர் ‘பாஜக தொகுதி பொறுப்பாளர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகவில்லை. அவர் விலக்கப்பட்டிருக்கிறார். அவர் தேர்தல் பணியாற்றினால் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறாது.. வேறொரு தலைவர் தலைமையில் பாஜக வென்று விடக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்தான் அண்ணாமலை’ என்று விளாசியிருக்கிறார்..
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
நான் பண்ணதுக்கும் விஜய்க்கும் சம்பந்தம் இல்ல!.. மன்னிப்பு கேட்ட பாடகர் வேல்முருகன்...