கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லயே!. நடனமாடிய விஜயை திட்டிய ஜெயக்குமார்!...
தமிழக வெற்றிக் கழகம் துவங்கப்பட்டு இரண்டு வருடங்கள் முடிவடைந்தது.. எனவே இரண்டாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் மூன்றாமாண்டு துவக்க விழா சமீபத்தில் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.
அந்த விழாவில் பின்னணி பாடகர் வேல் முருகன் விஜயை வாழ்த்தி பாடல்களை பாடினார்.. அவர் பாடியதைக் கேட்ட விஜய் உங்களோடு நான் நடனம் ஆடலாமா? என கேட்டார்.. அதன்பின் வேல்முருகன் பாட விஜய் அவருடன் இணைந்து மேடையில் நடனமாடினார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் இணையத்தில் வெளியானது..
இதைப்பார்த்து விஜய் ரசிகர் உற்சாகம் அடைந்தனர்.. ஏனெனில் கரூர் சம்பவம், ஜனநாயகம் படம் வெளிவராதது மற்றும் சிபிஐ விசாரணை ஆகியவை காரணமாக விஜய் சோகத்தில் இருப்பார் என்கிற எண்ணத்தில் அவர்கள் இருந்தார்கள்.. விஜய் அப்படி ஒரு சூழ்நிலையில் விஜய் நடனம் ஆடியது அவர்களை சந்தோஷப்படுத்தியது.. எனவே இந்த வீடியோவை பலரும் தங்களின் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்..
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 41 பேர் அவரால் உயிரிழந்திவிட்டனர். ஆனால் எந்த கவலையும் இன்றி மேடையில் விஜய் நடனமாடுகிறார்.. இதை இறந்து போன 41 குடும்பத்தினர் பார்த்தால் எவ்வளவு வருத்தப்படுவார்கள்.. இவர்தான் நாட்டை காப்பாற்ற போகிறாரா/ என கருத்து தெரிவித்திருக்கிறார்..