திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 ஜூன் 2024 (08:10 IST)

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Suryakumar yadav catch
நேற்று நடந்த உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டியில் இந்தியா சூப்பர் வெற்றி பெற்ற நிலையில் சூர்யகுமார் யாதவ்வின் கேட்ச்சை ரசிகர்கள் பலரும் புகழ்ந்து வருகின்றனர்.



நேற்று நடந்த உலகக்கோப்பை டி20 இறுதிப்போட்டியில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிக் கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்திருந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணியை சேஸிங்கில் 169 ரன்களில் மடக்கி இந்திய அணி சாதனை வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஓப்பனிங் இறங்கிய ரோஹித் சர்மா 9 ரன்களில் அவுட் ஆன நிலையில், ரிஷப் பண்ட் டக் அவுட் ஆனார். கோலி மட்டுமே நின்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சூர்யகுமார் யாதவ் மிடில் ஆர்டரில் இறங்கிய நிலையில் பலருக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ரபாடா வீசிய பந்தில் க்ளாசனிடம் கேட்ச் கொடுத்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார் சூர்யகுமார் யாதவ். எனினும் அடுத்தடுத்து அக்ஸர் படேல், ஷிவம் துபே ஆகியோர் முயன்று ரன்களை உயர்த்தினர்.


அதற்கு பிறகு இந்தியா சேஸிங்கில் இறங்கியபோது கடைசி வரை பரபரப்பு நிலவியது. அந்த சமயம் 7 விக்கெட்டுகளை இழந்திருந்த தென்னாப்பிரிக்காவில் ரபாடா பேட்டிங் இறங்கியிருந்தார். 19.5 வது பந்தில் ரபாடா அடித்த பந்து பவுண்டரி லைன் போனது. அதை சாதுர்யமாக பிடித்து ரபாடாவை அவுட் செய்தார் சூர்யகுமார் யாதவ். 2 பந்துகளில் 8 ரன்கள் என வெற்றியை நெருங்கியிருந்த தென்னாப்பிரிக்காவை இந்த கேட்ச் அவுட் நிலைக்குலைய செய்து ஆட்டத்திலிருந்து வெளியேற்றியது. இதன்மூலமாக தன்னை அவுட் செய்த ரபாடாவுக்கும் சூர்யகுமார் யாதவ் ரகசியமாக பதிலடி கொடுத்தார். இந்த கேட்ச்சை ரசிகர்கள் பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

Edit by Prasanth.K