மொரட்டு லைன் அப் ரெடி.. உலகக்கோப்பை டி20 இலங்கை அணி அறிவிப்பு!
Worldcup T20: ஜூன் மாதத்தில் தொடங்கி நடைபெற உள்ள ஐசிசி உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ள இலங்கை அணி வீரர்களை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டிகள் ஜூன் 2ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதில் 4 பிரிவுகளாக 20 நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளன. இதில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என பல நாடுகளும் தொடர்ந்து தங்களது அணி ப்ளேயர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது இலங்கை அணி ஹசரங்காவை கேப்டனாக கொண்ட இலங்கை ப்ளேயர்ஸ் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இலங்கை அணி : வனிந்து ஹசரங்கா (கேப்டன்), சரித் அசலங்கா (து.கேப்டன்), குஸால் மெண்டிஸ், பதும் நிஸங்கா, கமிந்து மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் சனகா, தனஞ்செய டி சில்வா, மஹிஷா தீக்ஷனா, துனித் வல்லலாகே, துஷ்மந்த சமீரா, நுவன் துஷாரா, மதீஷா பதிரானா, தில்ஷான் மதுசங்கா,
Edit by Prasanth.K