1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 ஜூன் 2024 (14:49 IST)

சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?

Worldcup T20
உலக கோப்பை டி20 போட்டிகள் அமெரிக்காவில் பரபரப்பாக நடந்து வந்த நிலையில் சூப்பர் 8 சுற்றில் மோதும் அணிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது.உலக கோப்பை டி20 போட்டிகள் அமெரிக்காவில் நடந்து வரும் நிலையில் 4 பிரிவுகளில் 20 நாட்டு அணிகள் மோதிய நிலையில் அதில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தேர்வு ஆகியுள்ளன.

இந்த 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குரூப் ஏவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 4 அணிகளும் தங்களுக்குள் மோதிக் கொள்கின்றனர். க்ரூப் பி-யில் அமெரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிக் கொள்கின்றன.

இதில் இந்திய அணி ஆப்கானிஸ்தானுடன் ஜூன் 20ம் தேதியில்ம், வங்கதேசத்துடன் ஜூன் 22ம் தேதியிலும், ஆஸ்திரேலியாவுடன் ஜூன் 24ம் தேதியிலும் விளையாட உள்ளது.

Super 8


Edit by Prasanth.K