தொடர்புடைய செய்திகள்
- துப்பட்டாக்களை தூக்கி எறிந்த பழங்குடியின மாணவிகள் - என்ன நடந்தது?
- இன்று தொடங்குகிறது 11ம் வகுப்பு பொதுத்தேர்வு! மாணவ மாணவிகள் ஆர்வம்.!
- தமிழகத்தில் 50,674 மாணவ- மாணவிகள் பிளஸ் 2 தேர்வை எழுதவில்லை: அதிர்ச்சி தகவல்
- அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு! மாணவ மாணவிகள் ஆர்வம்..!
- பரிட்சை ரொம்ப ஈசியா இருந்தது: பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் பேட்டி..!
எலும்பு முறிவு ஏற்பட்டபோதிலும் பொதுத்தேர்வு எழுத வந்த சிங்கப்பெண்: சக மாணவிகள் ஆச்சரியம்..!
மதுரையைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் எலும்பு முறிவு ஏற்பட்டு கை கால்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும் பொது தேர்வு எழுத வந்ததை அடுத்து சக மாணவிகள் ஆச்சரியமடைந்தனர்.
மதுரை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் சமீபத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து கை கால் மற்றும் முதுகு தண்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் கை கால்களில் மாவு கட்டு போட்டிருந்த நிலையில் 12-ம் வகுப்பு தேர்வு எழுத நேற்று தேர்வு அறைக்கு வந்தார்.
அவருக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் கைகால் எலும்பு முறிவுடன் தேர்வு எழுதினார். அவர் தேர்வு எழுத வந்ததை பார்த்து அவருடன் படிக்கும் சக மாணவிகள் ஆச்சரியமடைந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
