தொடர்புடைய செய்திகள்
- அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு! மாணவ மாணவிகள் ஆர்வம்..!
- பரிட்சை ரொம்ப ஈசியா இருந்தது: பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் பேட்டி..!
- பிளஸ் டூ பொதுத்தேர்வு சரியாக காலை 10 மணிக்கு தொடங்கியது .
- துவங்கியது +2 பொதுத்தேர்வு - ஆன் டியூட்டியில் பறக்கும் படை!
- தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் பிளஸ் 2 தேர்வுகள் ஆரம்பம்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து..!
தமிழகத்தில் 50,674 மாணவ- மாணவிகள் பிளஸ் 2 தேர்வை எழுதவில்லை: அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் 50,674 மாணவ மாணவிகள் பிளஸ் டூ தேர்வு எழுதவில்லை என பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில் இந்த தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வுக்காக 3 ஆயிரத்து 225 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று பிளஸ் டூ தேர்வு தொடங்கிய நிலையில் இன்றைய முதல் தேர்வான தமிழ் மொழி தேர்வை 50 ஆயிரத்து 674 மாணவ மாணவிகள் எழுதவில்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
