1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Student stich a thaali in his classmate girl

வகுப்பறையில் வைத்து கல்யாணம், வைரலான வீடியோ! – மாணவர்கள் செயலால் அதிர்ச்சி!

Tamilnadu
கன்னியாக்குமரி அருகே வகுப்பறையில் வைத்து மாணவன் ஒருவன் சக மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாக்குமரி களியக்காவிளை அருகே உள்ள அரசு பள்ளி ஒன்றில் கடந்த 3ம் தேதி 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தன் சக மாணவி ஒருவருக்கு வகுப்பறையிலேயே வைத்து தாலி கட்டியுள்ளான். இதை அங்கிருந்த மற்றொரு மாணவன் வீடியோ எடுத்து வாட்ஸப்பில் பகிர இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நடவடிக்கை எடுத்த பள்ளி நிர்வாகம் சம்பந்தபட்ட மாணவன், மாணவி மற்றும் வீடியோ எடுத்த மாணவனையும் இடைநீக்கம் செய்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் மாணவர்கள் விளையாட்டாக அப்படி செய்ததாக சொல்ல அவர்களுக்கு அறிவுரை வழங்கி, இனி இதுபோல் செய்வதில்லை என எழுதி வாங்கி கொண்டு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பது குறித்து அமைச்சர் முக்கிய உத்தரவு