கணித்தது 20 செ.மீ மழை.. பெய்தது 30 செ.மீ..! – டெல்டாவை வெளுத்த கனமழை!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் நேற்று டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் நேற்று டெல்டா மாவட்டப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் அதி கனமழை பெய்தது.
முன்னதாக மழைப்பொழிவு அதிகபட்சமாக 20 செ.மீ இருக்கலாம் எனக் கூறப்பட்டிருந்த நிலையில் நாள் முழுவதும் மழை பெய்துள்ளது. இதனால் அதிகபட்சமாக நாகப்பட்டிணம் மாவட்டம் திருப்பூண்டியில் 30 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நாள் முழுவதும் பெய்த கனமழையால் பல ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.