தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் ஒரு நீட் தற்கொலை… மதுரை மாணவி விபரீத முடிவு?
- 6 மாதமாக வேலை இல்லை…. தற்கொலை செய்து கொண்ட தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்!
- எதிர்ப்பையும் மீறி விக்னேஷ் குடும்பத்தை சந்தித்த உதயநிதி: ரூ.5 லட்சம் நிதி
- விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற உதயநிதி: பாமகவினர் தடுத்ததால் பரபரப்பு
- அப்பாவா நடந்துக்குவார்னு நினைச்சேன்! மகளை சீரழித்த தந்தை! – தற்கொலைக்கு முயன்ற தாய்!
பெற்றோருக்குப் பிடிக்காத காதல்… காதலனும் கைவிரிப்பு… அதிர்ச்சி முடிவை எடுத்த மாணவி!
புதுச்சேரி அருகே தன் காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால் மனம் உடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
புதுச்சேரி சேதராப்பட்டையை சேர்ந்த ஓட்டுனர் சரவணன். இவருக்கும் கல்லூரி மாணவியான காயத்ரி என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. ஆனால் இந்த காதல் விவகாரம் சரவணன் பெற்றொருக்கு தெரிய வர கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் அவசர அவசரமாக வேறொரு பெண்ணைப் பார்த்து சரவணனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
அந்த திருமணத்தை நிறுத்த பல வழிகளில் முயன்றுள்ளார் காயத்ரி. ஆனால் எந்த முயற்சியும் பலனளிக்காததால் மனமுடைந்த அவர் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது சம்மந்தமாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
