எதிர்ப்பையும் மீறி விக்னேஷ் குடும்பத்தை சந்தித்த உதயநிதி: ரூ.5 லட்சம் நிதி
எதிர்ப்பையும் மீறி விக்னேஷ் குடும்பத்தை சந்தித்த உதயநிதி
நேற்று நீட் தேர்வு பயம் காரணமாக அரியலூரை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இதனை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விக்னேஷ் குடும்பத்திற்கு ரூபாய் 7 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்தார். அதுமட்டுமன்றி விக்னேஷ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாகவும் உறுதியளித்தார்
மேலும் பாமக கட்சியில் இருந்து ரூபாய் 10 லட்சம் விக்னேஷ் குடும்பத்திற்கு நிதி உதவி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திமுக இளைஞர் அணி பொதுச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விக்னேஷ் குடும்பத்தினரை நேரில் சந்திக்கச் சென்றார். ஆனால் அங்கிருந்த பாமக தொண்டர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் எதிர்ப்பையும் மீறி அவர் விக்னேஷ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி ரூ 5 லட்சம் நிதி உதவி செய்துள்ளார்
இதுகுறித்து உதயநிதி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நீட் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் எலந்தங்குழி மாணவர் விக்னேஷின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். சிறிய வீட்டில் நிறையக் கனவுகளோடு இருந்த மகனை இழந்த அந்த பெற்றோரைத் தேற்ற வார்த்தைகள் வரவில்லை. தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்தேன்.