தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு!
- ஆர்.எஸ்.எஸ்ஸே அவங்க ஆளுன்னு சொல்ற அளவுக்கு இருக்கார்! – சீமான் குறித்து திருமாவளவன்!
- பூனை போல் சாதுவாக அமர்ந்திருக்கும் டி23 புலி! – வைரலாகும் வீடியோ!
- பேர் போட்டுக்கிட்டா பொதுச்செயலாளர் ஆகிடுவாங்களா? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாய்ச்சல்!
- 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
”வாங்குன பொருளுக்கு காசு குடுங்க”: தட்டி கேட்ட கடைகாரருக்கு கத்திக்குத்து!
திருகழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே வாங்கிய பொருளுக்கு பணம் கேட்ட கடைக்காரர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கழுகுன்றம் பேருந்து நிலையம் அருகே உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வருபவர் சுரேஷ். நேற்று முன்தினம் இந்த கடைக்கு பொருட்கள் வாங்க 5 பேர் வந்துள்ளனர். அவர்கள் அங்கு பணிபுரிந்த பெண் ஊழியரை கிண்டல் செய்ததுடன், வாங்கிய பொருளுக்கு பணம் தரவும் மறுத்துள்ளனர்.
இதனால் சுரேஷ் அருகில் உள்ள கடைக்காரர்களை அழைக்க சென்றுள்ளார். உடனே அந்த 5 பேரில் ஒருவன் சுரேஷ் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளான். பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது. சுரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் மூவரை கைது செய்துள்ளதுடன், தலைமறைவான இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
