தொடர்புடைய செய்திகள்
- கட்சிக்கு ஒரு உளவுப்படை வைக்க போகிறோம்! – ராமதாஸ் அதிரடி!
- கழக பொதுச்செயலாளர் சசிக்கலா? எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் கல்வெட்டு!
- நர்சரி பள்ளிகள் குறித்த அறிவிப்பு தவறானது! – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
- புரட்டாசி முடிஞ்சிட்டே.. மீன் சந்தையில் குவிந்த அசைவ பிரியர்கள்!
- கொரோனா பெயரில் புதிய படிப்புகள்! – திறந்தநிலை பல்கலைகழகம் அறிமுகம்!
14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி, காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வந்த நிலையில், தற்போது வங்க கடல் மற்றும் அரபிக்கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மேலும் சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், சேலம், ஈரோடு, பெரம்பலூர் ஆகிய 14 மாவட்டங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குமரி மாவட்டம், மன்னார் வளைகுடா பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
