1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Kerala flood house collapse into the river

கேராளாவை மூழ்கடிக்கும் வெள்ளம்; நொடியில் மூழ்கிய வீடு! – வைரலாகும் வீடியோ!

Kerala
கேரளாவின் பல பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் வீடு ஒன்று ஆற்று வெள்ளத்தில் இடிந்து மூழ்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக கேரளாவில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரளாவின் முக்கிய விவசாய பகுதியான குட்டநாடு பிராந்தியம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் நிலச்சரிவில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் இடமலையாரு அருகே 2 கி.மீ தூரத்தில் மலையின் ஒரு பகுதி இடிந்ததால் அணை நீர் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள ஆதிவாசி கிராமத்திற்கு இடையேயான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோட்டயம் மாவட்டம் முண்டகாயம் பகுதியில் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் கரையோரத்தில் அரிப்பு ஏற்பட்டதால் வீடு ஒன்று நொடியில் சரிந்து ஆற்றுக்குள் சாய்ந்தது. வீட்டில் உள்ளவர்கள் முன்னதாகவே வெளியேற்றப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
”வாங்குன பொருளுக்கு காசு குடுங்க”: தட்டி கேட்ட கடைகாரருக்கு கத்திக்குத்து!