1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. State government explains about 13 person released in Melavalavu

”13 பேரை விடுதலை செய்தது முன்னுரிமை இல்லை”.. தமிழக அரசு பதில்

மேலவளவு
மேலவளவு கொலை வழக்கில் 13 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ததில் முன்னுரிமை எதுவும் பின்பற்றப்படவில்லை என தமிழக அரசு பதிலளித்துள்ளது.

கடந்த 1997 ஆம் ஆண்டு, பட்டியலினத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் பஞ்சாயத்துத் தலைவர் போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, முன் விரோதம் காரணமாக முருகேசன் உட்பட 7 பேர் கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

முன்னதாக இதில் 3 பேர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் சமீபத்தில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

13 பேர் விடுதலையை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் 13 பேர் விடுதலைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை, மேலவளவு கொலை வழக்கில் விடுதலையான 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் மேலவளவு வழக்கில் 13 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ததில் முன்னுரிமை எதுவும் பின்பற்றப்படவில்லை என நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
மாஃபியாக்களிடமிருந்து சிவன்தான் காப்பாற்றினார்! – நித்தி சூளுரை!