திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 நவம்பர் 2019 (14:26 IST)

மாஃபியாக்களிடமிருந்து சிவன்தான் காப்பாற்றினார்! – நித்தி சூளுரை!

தன்னை யாராலும் கொள்ள முடியாது என நித்தியானந்தா தனது சீடர்களுக்கு அனுப்பிய வீடியோவில் பேசியுள்ளார்.

பெங்களூர் சீடர் ஒருவரின் மகள்களை நித்தியானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைத்திருப்பதாக புகார் அளித்ததை தொடர்ந்து போலீஸார் நித்தியானந்தாவை தேடி வருகின்றனர். கடந்த ஒரு வருட காலமாகவே நித்தியானந்தா இந்தியாவில் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் தான் இமயமலையில் ஆன்மீக பயிற்சியில் உள்ளதாக தெரிவித்து தனது சீடர்களுக்கு நித்தியானந்தா வீடியோ அனுப்பியுள்ளார்.

தற்போது பல நாடுகளிலிருந்தும் நித்தியானந்தாவிடம் சீடர்களாக இருந்த பலர் அவர்மீது பாலியல் புகார்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் வீடியோ வெளியிட்ட நித்தியானந்தா சர்வதேச மாஃபியாக்கள் தன்னை கொல்ல திட்டமிட்டு வருவதாகவும், காலபைரவன் மற்றும் சிவன் தன்னை காப்பாற்றி வைத்திருப்பதாகவும் பேசியுள்ளார். மேலும் யாராலும் தன்னை கொள்ள முடியாது என்றும் சிவனின் பாதங்களுக்கு அடியில் தான் நிம்மதியாய் வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

நித்தியானந்தாவின் பேச்சை கேட்ட பலர் மாஃபியாக்களிடமிருந்து சிவன் தன்னை காப்பாற்றியதாக கூறியதை பகடி செய்து வருகின்றனர்.