மாணவர்களின் தரத்தை உயர்த்தவே பொது தேர்வுகள்.. செங்கோட்டையன் விளக்கம்
மாணவர்களின் தரத்தை மேம்படுத்தவே 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சமீபத்தில் தமிழக அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து திமுகவினரும் கல்வியாளர்களும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன், “ மாணவர்களின் தரத்தை உயர்த்தவே பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆதலால் பொதுத் தேர்வை கண்டு மாணவர்களோ பெற்றோர்களோ அச்சப்பட வேண்டிய தேவை இல்லை” என கூறியுள்ளார்.
5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அதிக சுமைகளை கொடுக்கும் என பலர் விமர்சித்து வரும் நிலையில், செங்கோட்டையன் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.