தொடர்புடைய செய்திகள்
- செஸ் தொடக்க விழாவில் பிரதமர் மோடி: பட்டுச்சட்டையில் முதல்வர் ஸ்டாலின்!
- செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு: காரணம் இதுதான்!
- செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த உதவிய இந்திய அரசுக்கு நன்றி: அமைச்சர் மெய்யநாதன்
- செஸ் ஒலிம்பியாட் போட்டி: மகளுடன் கலந்து கொண்டார் ரஜினிகாந்த்!
- செஸ் விளையாட்டு தொடக்க விழா: 4 பேருக்கு கொரோனா தொற்று!
பிரதமர் மோடிக்கு சதுரங்க ஆட்டம் மிக பிடித்தமானது: முதல்வர் ஸ்டாலின் உரை
பிரதமர் மோடிக்கு சதுரங்க ஆட்டம் மிக பிடித்தமானது: முதல்வர் ஸ்டாலின் உரை
பிரதமர் மோடிக்கு சதுரங்க ஆட்டம் மிக பிடித்தமானது என முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:
வழக்கமாக ஒலிம்பியாட் போட்டியை தொடங்க 18 மாதங்கள் ஆகும்; தமிழ்நாடு அரசு நான்கே மாதத்தில் பன்னாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது; தமிழ்நாட்டின் மதிப்பும் பெயரும் இன்று முதல் மேலும் உயரும்
4 மாதத்தில் இந்த சர்வதேச போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்தது; துணை நின்ற அனைத்து அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டு
2018ம் ஆண்டு மிக சிறிய வயதில் கிராண்ட்மாஸ்டராக புகழ்பெற்றவர் பிரக்ஞானந்தா;
இந்தியாவில் உள்ள 75 கிராண்ட்மாஸ்டர்களில் 26 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்"
கீழடி அகழாய்வில் 2 வகையான ஆட்டக்காய்கள் கிடைத்தது; இதுபோன்ற காய்கள் சதுரங்க ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது
பிரதமர் மோடிக்கு சதுரங்க ஆட்டம் மிக பிடித்தமானது என அனைவருக்கும் தெரியும்; இந்தியாவுக்கு பெருமை தரும் நாள் என்பதால் பிரதமர் மோடியை தொடங்கி வைக்க அழைக்கப்பட்டது!
அடுத்த கட்டுரையில்
