திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 28 ஜூலை 2022 (19:09 IST)

செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த உதவிய இந்திய அரசுக்கு நன்றி: அமைச்சர் மெய்யநாதன்

meyyanathan
செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த உதவிய இந்திய அரசுக்கு நன்றி: அமைச்சர் மெய்யநாதன்
செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த உதவிய இந்திய அரசுக்கு நன்றி என தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வரவேற்பறையில் தெரிவித்துள்ளார் 
 
இன்று சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது
 
இதில் பிரதமர் மோடி முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இந்த போட்டியின் வரவேற்பு உரையாற்றிய அமைச்சர் மெய்யநாதன் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த உதவி செய்த இந்திய அரசுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்
 
அவர் தனது உரையில் ஒன்றிய அரசு என்பதை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
அதுமட்டுமின்றி இந்திய அரசின் உதவியால் தான் இந்த போட்டி நடக்கிறது என்பதையும் தமிழக அரசு ஒப்புக் கொண்டது போல வரவேற்புரை நிகழ்த்தினார் என்று பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.