வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 28 ஜூலை 2022 (12:05 IST)

செஸ் விளையாட்டு தொடக்க விழா: 4 பேருக்கு கொரோனா தொற்று!

corona
சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்க உள்ளது என்பதும் இன்றைய தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பலர் இந்த தொடக்க விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். தொடக்க விழாவில் பல கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கலைஞர்களில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து  கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள 900 பேர்களுக்கு கொரோனா  பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன