தொடர்புடைய செய்திகள்
- மகளிர் உரிமை தொகையை இரண்டாவது கட்ட விரிவாக்கம்.. முதல்வர் இன்று தொடங்கி வைப்பு..!
- ஜியோ ஹாட்ஸ்டார் தயாரிக்கும் 40 திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள்.. உதயநிதி முன் அறிமுக நிகழ்ச்சி..!
- அரசியலில் எந்தப் புயல் வந்தாலும் அதை எதிர்கொள்ள தி.மு.க. தயார்: தங்கம் தென்னரசு
- இது கட்சி மாற்றமில்லை, பிராஞ்ச் மாற்றம்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்..!
- உதய நிதிக்கு வாழ்க்கை கொடுத்ததே விஜய்தானா? இவரு என்ன புது மேட்டர வலைப்பேச்சு பிஸ்மி கிளப்புறாரு
உதயநிதி என்னை விட டேஞ்சர்!.. மேடையில் தெறிக்கவிட்ட ஸ்டாலின்..
திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் முதல்வர், துணை முதல்வர் உதயநிதி, துரைமுருகன், ஆ ராசா உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
கட்சிக்கு என்ன தேவை என்பதை புரிந்து செயல்பட்டு வருகிறார் உதயநிதி. லட்சக்கணக்கான இளைஞர்களை கட்சியில் சேர்த்திருக்கிறார். கொள்கை ரீதியாக வலுவாக்க பல பாசறை கூட்டங்களையும் அவர் நடத்தி இருக்கிறார். அவருக்கு என் பாராட்டு.
உதயநிதி ஸ்டாலின் மிகவும் ஆபத்தானவர் என எதிரிகள் புலம்புகிறார்கள். ஆனால் தம்பி உதயநிதி தனது பொறுப்பை உணர்ந்து பவர்ஃபுல்லாக செயல்பட்டு வருகிறார். இன்னும் சொல்லப்போனால் அவர் இறங்கி அடிக்கிறார்.
சமீபத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா பீகாரை முடித்துவிட்டோம்.. அடுத்து எங்கள் இலக்கு தமிழ்நாடு என்று சொல்லி இருக்கிறார்.
எழுதி வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் எத்தனை பேரை கூட்டி வந்தாலும் நீங்கள் நினைப்பது தமிழ்நாட்டில் நடக்காது.. ஏனெனில் இது தமிழ்நாடு.. அன்போடு வந்தால் அரவணைப்போம்.. ஆணவத்தோடு வந்தால் அடிபணிய மாட்டோம்.. எதிர்த்து நிற்போம் என்று பேசியிருக்கிறார் முதல்வர்.
