புதன், 18 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva

ஜியோ ஹாட்ஸ்டார் தயாரிக்கும் 40 திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள்.. உதயநிதி முன் அறிமுக நிகழ்ச்சி..!

ஜியோ ஹாட்ஸ்டார் தயாரிக்கும் 40 திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள்.. உதயநிதி முன் அறிமுக நிகழ்ச்சி..!
தென்னிந்திய மொழிகளில் ஜியோ தற்போது கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும், இந்நிறுவனம் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் 40 திரைப்படங்கள் மற்றும் சில வெப்தொடர்களை தயாரிக்க உள்ள நிலையில் இதற்கான அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது.
 
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சாமிநாதன் மற்றும் கமல்ஹாசன், மோகன்லால், நாகார்ஜுனா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இந்த அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 
இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசும்போது, "ஸ்க்விட் கேம் உலகம் முழுவதும் பல கோடி பேரால் பார்க்கப்பட்டது. சினிமாவிற்கு மொழி தேவையில்லை. தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த காலத்தில் ஒரு கலைஞனால் யாரையும் எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது" என்றும் கூறினார்.
 
மேலும், ஹாட்ஸ்டாரின் இந்த முயற்சிக்குத் தனது வாழ்த்துகள் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 
தென்னிந்திய மொழிகளுக்கு முக்கிய கவனம் கொடுத்து ஹாட்ஸ்டார் பல திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களை தயாரிக்க இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva