வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

மகளிர் உரிமை தொகையை இரண்டாவது கட்ட விரிவாக்கம்.. முதல்வர் இன்று தொடங்கி வைப்பு..!

மகளிர் உரிமை தொகையை இரண்டாவது கட்ட விரிவாக்கம்.. முதல்வர் இன்று தொடங்கி வைப்பு..!
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை ஏற்கனவே ஒரு கோடி பெண்களுக்கு மேல் வழங்கப்பட்டு வரும் நிலையில், இரண்டாவது கட்ட விரிவாக்கத்தை இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
 
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் "வெல்லும் தமிழ் பெண்கள்" என்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிகழ்ச்சியில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் இரண்டாவது கட்ட விரிவாக்கப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். 
 
இந்த மாத இறுதிக்குள், இரண்டாவது கட்டமாக தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva