திங்கள், 19 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Modified: ஞாயிறு, 30 நவம்பர் 2025 (10:08 IST)

உதய நிதிக்கு வாழ்க்கை கொடுத்ததே விஜய்தானா? இவரு என்ன புது மேட்டர வலைப்பேச்சு பிஸ்மி கிளப்புறாரு

உதய நிதிக்கு வாழ்க்கை கொடுத்ததே விஜய்தானா? இவரு என்ன புது மேட்டர வலைப்பேச்சு பிஸ்மி கிளப்புறாரு
உதயநிதி வெர்சஸ் விஜய் என்று வரும்பொழுது பெரும்பாலானவர்கள் விஜய்க்கு தான் அதிக ஆதரவை கொடுத்து வருகின்றனர். ஆனால் கருணாசை பொருத்தவரைக்கும் உதயநிதிக்கு ஆதரவாகவே பேசி வருகிறார். ஒரு நடிகர் இருக்கிறார், அவருக்கு அதிகளவு சம்பளம் கொடுத்ததே ரெட் ஜெயண்ட் என்று தான் என கருணாஸ் கூறி வருகிறார். ஆனால் சினிமா வட்டாரங்களில் பேசும்போது உதயநிதி ஸ்டாலினுக்கு தான் விஜய் வாய்ப்பு கொடுத்தார் என்று கூறுகிறார்கள். ஆனால் கருணாஸ் வேறு மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார். இதைப்பற்றி வலைப்பேச்சு பிஸ்மி அவருடைய கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்
 
கருணாஸ் பேச்சை சீரியஸாக எடுத்துக் கொள்ளவே கூடாது. ஜெயலலிதா இருந்த வரைக்கும் ஒரு மாதிரி பேசினார். எடப்பாடி பழனிச்சாமி இருந்த வரைக்கும் ஒரு மாதிரி பேசினார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு வந்ததும் கருணாசை கிட்டவே சேர்க்கவில்லை .அதன் பிறகு தான் திமுகவுக்கு ஆதரவாக தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்தார். அதற்கு முன்புவரைக்கும் உதயநிதி ஸ்டாலினை எப்படி இவர் திட்டினார்? ஸ்டாலினை எப்படி திட்டினார் ? கருணாநிதியை எப்படி திட்டினார் என்பது பற்றிய நிறைய ஆதாரங்கள் youtube வீடியோக்களில் இருக்கின்றன.
 
அப்படிப்பட்ட ஒருத்தரின் கருத்துக்களை நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளவே கூடாது. இதில் ஊடகங்களும் அவருடைய கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவே கூடாது. இன்றைக்கு ஏன் விஜயை அவர் திட்டுகிறார் என்றால் இது நாள் வரைக்கும் நாம் எடப்பாடியை திட்டியாச்சு. அதனால் அவருடைய கட்சியில் நிச்சயமாக வாய்ப்பு கிடைக்காது. திமுகவுக்கு ஆதரவாக ஏதாவது பேசினால் குறைந்தபட்ச ஓட்டாவது நமக்கு கிடைக்கும். அதை வைத்து இன்னும் நாம் ஒரு ஐந்து வருடம் ஓட்டலாம் என்பது தான் அவருடைய கணக்கு. அப்போ ஸ்டாலின் பார்வையில் நாம் பட வேண்டும் என்றால் இன்றைக்கு திமுகவிற்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பது தவெக கட்சி.
 
அவர்களை விமர்சனம் செய்தால் ஸ்டாலினும் உதயநிதியும் பயங்கரமாக சந்தோஷப்பட்டு சாருக்கு ஒரு தொகுதி பார்சல் அப்படின்னு கையில கொடுப்பாங்கன்னு கருணாஸ் நினைக்கிறார். அதனால் தான் விஜய் குறித்து பேசுகிறார். ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் விஜய் நடித்த ஒரே ஒரு படம் குருவி திரைப்படம். கருணாஸ் சொல்வது என்னவெனில் விஜய்க்கு அதிகம் சம்பளம் கொடுத்ததே ரெட் ஜெயண்ட்தான் அப்படின்னு சொல்கிறார். அவருக்கு தெரியுமா?

உதய நிதிக்கு வாழ்க்கை கொடுத்ததே விஜய்தானா? இவரு என்ன புது மேட்டர வலைப்பேச்சு பிஸ்மி கிளப்புறாரு
குருவி படத்தில் விஜய்க்கு சம்பளம் என்ன? இன்றைக்கு  ஜன நாயகனில் அவர் வாங்குகிற சம்பளம் என்ன என்பது பற்றி அவருக்கு தெரியுமா? எல்லாத்துக்கும் மேல விஜய் குருவி படத்திற்கு தேதி கொடுத்த பிறகு தான் ரெட் ஜெயன்ட் அப்படிங்கிற பேனரே மக்களிடம் போய் சேர்ந்தது. அதனால் விஜய் தான் ரெட் ஜெயண்ட்டுக்கு வாழ்க்கை கொடுத்தாரே தவிர உதயநிதி விஜய்க்கு வாழ்க்கை கொடுக்கவில்லை. கருணாஸ் தவறாக சொல்கிறார், அல்லது உண்மை என்னவென்று தெரிந்து கொண்ட பிறகு திமுகவை குஷிப்படுத்துவதற்காக இப்படி ஒரு அப்பட்டமான பொய்யை சொல்கிறார் என வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.