1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Srimathi mother file a case in student case

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு; 5 பேர் ஜாமினுக்கு எதிராக ஸ்ரீமதியின் தாய் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

srimathi mother
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கில் 5 பேருக்கு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் இதனை எதிர்த்து ஸ்ரீமதி தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் மரணமடைந்தார் 
 
இதனை அடுத்து பள்ளியின் தாளாளர் ஆசிரியை உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் 5 பேரின் ஜாமீன் மனு குறித்து விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த நிலையில் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது
 
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு குறித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஸ்ரீமதி தாயார் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் 5 பேரின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 
அடுத்த கட்டுரையில்
ஓடும் ரயிலில் பிரசவம் பார்த்த மருத்துவ மாணவி: தாயும் சேயும் நலம்!