திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (22:39 IST)

மாணவி ஸ்ரீமதி வழக்கில் புதிய ஆதாரம் வெளியீடு!

kallacurichy
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் என்ற பகுதியில் ஸ்ரீமதி என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணமடைந்தார்
 

இது கொலை என்று மாணவியின் பெற்றோர்கள் கூறிவரும் நிலையில் சமீபத்தில் நீதிமன்றம் இது கொலை அல்ல என்று தெரிவித்திருந்தது.


இந்த நிலையில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில்  ஜுலை 13 ஆம் தேதி இரவு 7 மணியளவில் பள்ளி நிர்வாகத்துடன் செல்வி உட்பட 9 பேர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதற்கான ஆதாரம் தற்போது கிடைத்துள்ளது.

மாணவியின் பெற்றோர், பள்ளி நிர்வாகம் தங்களை அழைத்துப் பேசவில்லை என்று குற்றம் சாட்டியிருந்த நிலையில்,  இந்த ஆதாரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது இந்த வழக்கு விசாரணையில் திருப்பு முனை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.