வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (12:41 IST)

உச்சநீதிமன்றத்திற்கு சென்னையில் கிளை! – முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

சென்னையில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில், சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கும் கோரிக்கையை முதல்வர் விடுத்துள்ளார்.

மாநில நீதிமன்றங்களுக்கு மேலாக உச்சநீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. பல்வேறு வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு செல்லும் நிலையில் இதற்காக டெல்லி செல்வது அவசியமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்திற்கான கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் நீதிமன்ற வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “உச்சநீதிமன்றத்துக்கான கிளை நீதிமன்றம் சென்னையில் அமைக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தமிழ் மொழி வழக்காடு மொழியாக்கப்பட வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளார்.