ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 31 ஆகஸ்ட் 2022 (11:34 IST)

கள்ளக்குறிச்சி விவகாரம்.. ஜாமினில் வெளியே வந்த கைதான 5 பள்ளி நிர்வாகிகள்!

Kallakurichi
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர் 
 
கைது செய்யப்பட்டவர் ஐவரும் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஜாமின் மனு மீதான விசாரணையில் ஐவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது
 
இருப்பினும் சிறை நிர்வாகம் நடவடிக்கை காரணமாக அவர்கள் விடுதலை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று காலை ஜாமீனில் 5 பள்ளி நிர்வாகிகளும் விடுவிக்கப்பட்டதாகவும் அவர்கள் சிறையில் இருந்து வெளியே வரும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஐந்து பேர்களை ஜாமீனில் விடுதலை செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது