வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : சனி, 2 நவம்பர் 2024 (08:37 IST)

தீபாவளிக்கு சொந்த சென்றவர்கள் சென்னை திரும்ப 12,846 பேருந்துகள்: தமிழக அரசு அறிவிப்பு..!

தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

வரிசையாக நான்கு நாட்களுக்கு மேலாக விடுமுறை என்பதால், தீபாவளி பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிய பொதுமக்கள் அடுத்த கட்டமாக இன்று அல்லது நாளை சென்னைக்கு திரும்ப உள்ளனர்.

இதற்கு வசதியாக இன்றும் நாளையும் சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், இன்று முதல் நான்காம் தேதி வரை 12 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 10,784 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், இதன் மூலம் சுமார் 6 லட்சம் பேர் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பயணம் செய்துள்ளதாகவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சென்னைக்கு திரும்பும் வசதிக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், முன்பதிவு செய்து கொண்டு சிறப்பான பயணத்தை அமைத்துக் கொள்ளலாம் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.


Edited by Siva