1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 1 நவம்பர் 2024 (10:51 IST)

காதலுக்காக போலீஸ் வேடமணிந்த பெண்… சிக்கிய சுவாரஸ்ய பின்னணி!

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியைச் சேர்ந்தவர் சிவா. இவருக்கும் சென்னை தாம்பரத்தை அடுத்த அபி பிரபா என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.

ஆனால் சிவாவின் தாய் தன் மகனை, ஒரு பெண் போலீஸூக்குதான் திருமணம் செய்துகொடுப்பேன் எனக் கூறியுள்ளார். இதைக் காதலியிடம் சிவா பகிர, காதலுக்காக பெண் போலீஸ் போல வேட அபி பிரபா தயாராகியுள்ளார். இதையடுத்து அபி பிரபா தாம்பரம் ரயில் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுவதாக சொல்லி சிவாவின் தாயாரை வந்து சந்தித்துள்ளார்.

அபி பிரபா சிவா பற்றிய தகவல் சிவாவின் ஊர் முழுக்க பரவியுள்ளது. அதில் யாரோ விசாரிக்க அபி பிரபா உண்மையில் போலீஸ் இல்லை என்பது தெரியவந்துள்ளது. போலீஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட அபி பிரபா மற்றும் சிவா ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.