வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 2 மார்ச் 2026 (10:54 IST)

அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு ரேடாரை அழித்துவிட்டோம்: ஈரான் அறிவிப்பால் பரபரப்பு..!

அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு ரேடாரை அழித்துவிட்டோம்: ஈரான் அறிவிப்பால் பரபரப்பு..!
மத்திய கிழக்கு போர்க்களத்தில் ஈரான் தனது தாக்குதல்களை அதிரடியாகத் தீவிரப்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அல்-ருவைஸ் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன THAAD ஏவுகணை எதிர்ப்பு ரேடார் அமைப்பைத் துல்லியமாகத் தாக்கி அழித்துவிட்டதாக ஈரான் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது.
 
அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அரணாக கருதப்படும் இந்த அமைப்பின் மீதான தாக்குதல், அப்பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த சேதத்தை அமெரிக்க ராணுவம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
 
இத்துடன் நில்லாமல், ஹார்முஸ் நீரிணை அருகே பயணித்த அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு சொந்தமான மூன்று எண்ணெய் டேங்கர் கப்பல்களையும் தாக்கியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஓமனின் துக்ம் துறைமுகத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரான், தற்போது முக்கிய விநியோக வழித்தடங்களை இலக்கு வைத்துள்ளது. 
 
இந்த பதிலடித் தாக்குதல்களால் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, சர்வதேச வர்த்தகமும் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்காவின் 'எபிக் பியூரி' நடவடிக்கைக்கு எதிராக ஈரான் எடுத்துள்ள இந்த முடிவுகள், வளைகுடா நாடுகளை பெரும் போர் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளன.
 
Edited by Siva