வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 31 அக்டோபர் 2024 (11:37 IST)

சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் ராக்கிங் கொடுமை? போலீஸ் டி.எஸ்.பி மகன் மீது வழக்குப்பதிவு

ragging
சென்னையில் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் ராகிங் கொடுமை செய்ததால், போலீஸ் டி.எஸ்.பி மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் கடலூரை சேர்ந்த ஜோஸ் ஜேக்கப் என்பவர் மகன் ஆலன் என்பவர் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், ஆலன்  கடந்த சில தினங்களுக்கு முன் சாப்பிட்ட போது, பயிற்சி மருத்துவராக இருக்கும் சிலர், ஜூனியர் மாணவர்களுக்கு ராகிங் செய்ததாக தெரிகிறது. 
 
இது குறித்து ஆலன் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். புகாருக்கு பின்னர் ஆலன் மீது தாக்குதல் நடந்ததாகவும், இந்த தாக்குதலை நடத்தியவர்களுள் ஒருவர் டி.எஸ்.பி மகன் எனவும் தெரியவந்துள்ளது. 
 
இதையடுத்து டிஎஸ்பி மகன் உள்பட இருவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். தற்போது விசாரணை நடந்து வந்திருப்பதாகவும், விசாரணைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Edited by Siva