மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனர் மீது பாலியல் புகார்!.. போலீசார் வழக்குபதிவு!..
2024ம் வருடம் பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ்.. கேரளாவில் மஞ்சுமெள் பாய்ஸ் என்கிற குழுவை சேர்ந்த சில இளைஞர்கள் கொடைக்கானலில் உள்ள குணா குகையை பார்க்க செல்கிறார்கள். அப்போது குணா குகையில் ஒருவர் தவறி விழுந்துவிட என்ன நடக்கிறது என்பதுதான் கதை..
கமல் ஏற்கனவே நடித்திருந்த குணா படம் தொடர்பான கதை என்பதால் இந்த படம் தமிழகத்தில் வரவேற்பை பெற்றது.. ஆச்சரியம் என்னவெனில் கமலின் குணா படம் ஓடவில்லை.. ஆனால் குணா குகை தொடர்பான கதையை கொண்டு உருவான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் அசத்தலான வெற்றியை பெற்றது..
இந்த படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் பாடல் மீண்டும் ரசிகர்களிடம் வைரலானது.. இந்த படம் உலகமெங்கும் 200 கோடி இவரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில்தான், இந்த படத்தை இயக்கிய சிதம்பரம் பொடுவேல் மீது ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்திருக்கிறார்.. அந்த புகாரின் அடிப்படையில் கேரள போலீஸ் சிதம்பரம் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருக்கிறது.. இது தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத்தெரிகிறது. இந்த விவகாரம் மலையாள திரைப்படங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது..