1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2024 (11:46 IST)

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

Gold
கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சொல்கிறது. கடந்த மார்ச் மாதமே ஒரு பவுன் தங்கத்தின் விலை 50 ஆயிரத்தை தொட்டது. அதன்பின் படிப்படியாக அதிகரித்து 2 மாதங்களில் அதாவது மே மாதம் 55 ஆயிரத்தை தொட்டது. இப்படி தொடார்ந்து தங்கத்தின் விலை அதிகரித்துகொண்டே சென்றது மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

அதேநேரம், கடந்த ஜூலை மாதத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தங்கத்தின் விலை குறைய துவங்கி ஒரு பவுன் 51 ஆயிரம் வரை சென்றது. எனவே, தங்கத்தின் விலை மேலும் குறையும் என மக்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், தங்கத்தின் விலை இறங்கிய வேகத்திலேயே மீண்டும் உயர துவங்கியது. கடந்த செப்டம்பர் மாதம் தங்கத்தின் விலை 56 ஆயிரமாக உயர்ந்தது. அதன்பின் 57 ஆயிரத்தை தொடுவதும், குறைவதுமாக இருந்தது. கடந்த 16ம் தேதி ஒரு பவுன் தங்கத்தின் விலை 57 ஆயிரத்தை தாண்டியது.

அதன்பின் தங்கத்தின் விலை குறையவே இல்லை. தொடர்ந்து ஏறிக்கொண்டே போனது. குறைந்தாலும் பெரிய வித்தியாசமில்லை என்கிற நிலையில்தான் தங்கத்தின் விலை இருந்தது. இந்நிலையில்தான், கடந்த 20ம் தேதி ஒரு பவுன் தங்கத்தின் விலை 58 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் சில நாட்களில் 59 ஆயிரத்தை தாண்டியது.

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஒரு பவுனுக்கு 560 குறைந்து 59,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து 7,385 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 106 ரூபாய்க்கும், கிலோ ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது.