1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2024 (17:58 IST)

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... நாளைக்கு மின்சார ரயில்கள் இயக்கம் எப்படி தெரியுமா?

Electric Train
சென்னையில் வசிப்பவர்கள் வேலைக்கு செல்வதற்கு பைக், ஆட்டோ, பேருந்து மற்றும் ரயில் ஆகியவற்றையே நம்பி இருக்கிறார்கள். ஆனால், இதில் செல்வதை விட மின்சார ரயிலில் சென்றால் விரைவாகவே சென்றுவிடலாம். ஏனெனில், ரயில் பாதையில் போக்குவரத்து நெரிசல் இருக்காது.

எனவே, சென்னைவாசிகள் பலரும் ரயிலில் செல்வதையே பெரிதும் விரும்புவார்கள். வண்டலூர் முதல் பாரிஸ் வரை மின்சார ரயில்கள் மூலம் விரைவாக செல்ல முடியும். பாரிஸ் வரை உள்ள எல்லா முக்கிய பகுதிகளிலும் ரயில் நின்று செல்லும். பல வருடங்களாக ரயில் பயணம் செய்பவர்கள் பலரும் இருக்கிறார்கள்.

மின்சார ரயில் மட்டுமே இருந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. மின்சார ரயிலை ஒப்பிடும்போது மெட்ரோ ரயிலில் டிக்கெட் விலை அதிகம். ஆனால், மின்சார ரயிலை விட விரைவாக மெட்ரோ ரயில் மூலம் செல்ல முடியும். எனவே, பலரும் அதிலும் பயணித்து வருகிறார்கள்.

அதேநேரம், சென்னையை பொறுத்தவரை திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை அதிக ரயில்கள் இயக்கப்படும். ஞாயிற்றுகிழமை மிகவும் குறைவான ரயில்கள் இயக்கப்படும். தீபாவளியை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை விட்டிருப்பதால் ரயிலில் அதிகம் பேர் பயணிக்கவில்லை.

எனவே, சென்னை செண்ட்ரல் - அரக்கோணம், செண்ட்ரல் - சூலூர் பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடங்களில் 2ம் தேதிதான் நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை அட்டவணை படியே மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. கூட்டம் குறைவாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.