தொடர்புடைய செய்திகள்
- ஓய்வு பெறுகிறார் பேரறிவாளனை விடுதலை செய்த நீதிபதி!
- கனகசபையில் பக்தர்கள் அனுமதி: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
- விடுதி மாணவர்களுக்கு நலதிட்டங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்
- திமுக ஆட்சியில்....உயர்கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும்- முதல்வர் ஸ்டாலின்
- புதின் ஆட்சியை கவிழ்க்க ராணுவம் சதியா? ரஷ்யாவில் பரபரப்பு
ஆட்சியாளர் மாறினாலும் விசாரணை நியாயமாக இருக்க வேண்டும்: எஸ்.பி.வேலுமணி வழக்கில் தீர்ப்பு
ஆட்சியாளர் மாறினாலும் விசாரணை நியாயமாக இருக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
டெண்டர் முறைகேடு வழக்கின் முதல் கட்ட விசாரணை அறிக்கையை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து தீர்ப்பு அளித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பை இன்று வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஆட்சியாளர்கள் மாறலாம், அரசு விசாரணை அமைப்புகள் நியாயமாக இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.
