செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 19 மே 2022 (19:23 IST)

ஓய்வு பெறுகிறார் பேரறிவாளனை விடுதலை செய்த நீதிபதி!

judge
ஓய்வு பெறுகிறார் பேரறிவாளனை விடுதலை செய்த நீதிபதி!
பேரறிவாளனை விடுதலை செய்த நீதிபதி வரும் ஜூலை 7ம் தேதியுடன் ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
நேற்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்த நீதிபதி நாகேஸ்வரராவ் பேரறிவாளனை விடுதலை செய்வதாக உத்தரவு பிறப்பித்தார். அதுமட்டுமின்றி கவர்னருக்கு தனது கடும் கண்டனம் தெரிவித்தார்
 
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி நாகேஸ்வரராவ் வரும் ஜூலை 7ஆம் தேதி ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் கோடை விடுமுறை தொடங்குவதால் நாளை அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 பேரறிவாளன் விடுதலை வழக்கு மட்டுமின்றி பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டும் உள்பட பல வழக்குகளுக்கு அதிரடி தீர்ப்புகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது