திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 16 மே 2022 (15:54 IST)

திமுக ஆட்சியில்....உயர்கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும்- முதல்வர் ஸ்டாலின்

சென்னை பல்கலைக்கழகத்தில்  14 வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

தமிழகத்தில் உள்ள முன்னணி பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழகம். இதன் 164 வது பட்டமளிப்பு விழா இன்று நடந்து வருகிறது. இதில், கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் வளர்ச்சிக்கு காரணமானவர்களை உருவாக்கியது சென்னை பல்கலைக்கழகம் என தெரிவித்துள்ளார்.

மேலும், எனது தலைமையிலான ஆட்சி காலம் உயர்கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும் என்றும் இளைஞர்களுக்கான அனைத்துத் தகுதிகளையும் உருவாக்கும் கடமையை தமிழ் நாடு அரசு செய்து கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.